நீவித் தேய்த்துக் குளிக்க வைத்தால் குழந்தை நல்லா தூங்கும்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-24

நீவித் தேய்த்துக் குளிக்க வைத்தால் குழந்தை நல்லா தூங்கும்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-24

நம்பிக்கை:

"குழந்தையைப் குளிக்க வைக்கும்போது நன்கு நீவித் தேய்ப்பது, மஞ்சள் பூசுவது, அதன்பிறகு புகை போடுவது ஆகியன நோய் எதிர்ப்பைத் தருவதுடன் நல்ல தூக்கத்தையும் தருவிக்கும்!"

உண்மை:

பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கென்றே பிரத்தியேகமாக வயதானவர்களை பணியில் அமர்த்துவதும், அவர்கள் குழந்தையைக் குளிப்பாட்டுவதில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான், நீவித் தேய்த்துக் குளிக்க வைப்பதும், புகை போடுவதும்.

பொதுவாகப் பிறந்த குழந்தையுடைய தோல் பகுதியின் பரப்பளவு, அதன் எடையைக் காட்டிலும் மிக அதிகம் என்பதால், குழந்தையின் உடல் வெப்பம் எளிதாகக் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே குழந்தைக்கு வியர்ப்பது மிகக் குறைவாக இருக்கும்.

மேலும், பிறந்த குழந்தைக்கு நம்மைப்போல குளிர்கிறது என்று சொல்லவும் தெரியாது. இதனால், ஹைப்போதெர்மியா (hypothermia) எனப்படும் குறைந்த உடல்வெப்ப நிலை குழந்தைக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தையை எப்போதும் சற்று வெதுவெதுப்பாகவும், தாயின் அரவணைப்பிலும் வைத்திருப்பது நல்லது.

இப்படியிருக்க, நீண்டநேரம் நீவித்தேய்த்துக் குளிக்க வைப்பது ஒருபக்கம் குழந்தையின் உடல் வெப்பத்தைக் குறைக்கும். அதை நிவர்த்திசெய்ய அதற்குப் பின் அவர்கள் புகை போடுவது என்பது அலர்ஜி, நுரையீரல் நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம்.

பிறகு, குழந்தையை எப்படித்தான் குளிப்பாட்டுவது என்று கேட்கிறீர்களா?

உண்மையில் குழந்தையைக் குளிப்பாட்ட, ஒரு மென்மையான டவலை சுடுநீரில் நனைத்து, பிழிந்து குழந்தையைத் துடைப்பதே போதுமானது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
நீவித் தேய்த்துக் குளிக்க வைத்தால் குழந்தை நல்லா தூங்கும்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-24
வசம்பு தேய்த்தால் பேச்சு சீக்கிரம் வருமா!? : அவ(ள்) நம்பிக்கைகள்-23

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in