‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...‘ பெண் வாக்காளர்களை குறிவைக்கும் ராகுல் காந்தியின் வாக்குறுதி அஸ்திரங்கள்

தனது ஒற்றுமை நடைபயணத்தின்போது ராகுல் காந்தி
தனது ஒற்றுமை நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால், ’மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும், அரசின் புதிய பணியிடங்களில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத அரசுப் பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று உறுதியளித்தார். மகளிருக்கான சரிபாதி ஒதுக்கீடு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதம் இல்லையா? மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் இருப்பு 50 சதவீதம் இல்லையா? அப்படியானால், சிஸ்டத்தில் அவர்களின் பங்கு ஏன் மிகவும் குறைவாக உள்ளது? நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்தில் பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே, பெண்களின் திறன் முழுமையாக வெளிப்பட வாய்ப்பாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெண் வாக்காளர்களுடன் ராகுல் காந்தி
பெண் வாக்காளர்களுடன் ராகுல் காந்தி

மேலும், “அனைத்து புதிய அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பிலும் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்" என்றும் அந்த பதிவில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

”பாதுகாப்பான வருமானம், எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் பலமாக மாறுவார்கள். 50 சதவீத அரசுப் பதவிகளில் பெண்களை வைத்திருப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும். சக்தி வாய்ந்த பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளில் மகளிர் வாக்குகள் முக்கியமானவை என்பதால், அவற்றை குறிவைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியிலும், தேர்தல் நெருக்கத்திலும் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி குவிக்கும். நாட்டின் இதர அரசியல் களேபரங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எவையும் பெண் வாக்காளர்களை அதிகம் பாதிக்கப்போவதில்லை. தான் மற்றும் தங்களது குடும்பத்தினர் எதிர்காலத்துக்கான கட்சிகளின் வாக்குறுதிகள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை ஆகியவை குறித்து மட்டுமே பெண்கள் விசனப்படுவார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதற்கு முன்பாகவும் பெண் வாக்காளர்களை குறிவைத்து 5 பிரதான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது. அவற்றில் முதலாவதான ’மகாலட்சுமி’ உத்தரவாதத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். அடுத்ததாக மத்திய அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மூன்றாவதாக, அங்கன்வாடி மற்றும் மதிய உணவுப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி பெண்களுக்குக் கற்பிப்பதற்கும், அவற்றைச் செயல்படுத்துவதில் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு சட்டப்பூர்வ செயல்பாட்டாளர் நியமிக்கப்படுவார். ’சாவித்ரி பாய் புலே விடுதிகள்’ உத்தரவாதத்தின் கீழ், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in