ராணுவ வீராங்கனைகளின் காஷ்மீர் டு குமரி பயணம்!

ராணுவ வீராங்கனைகளின் காஷ்மீர் டு குமரி பயணம்!

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதை கொண்டாடும் வகையிலும், பெண்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையிலும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) துணை ராணுவப்படையைச் சேர்ந்த 38 பெண்கள் பைக் பணம் நடத்திவருகின்றனர். காஷ்மீரில் இருந்து கடந்த 8-ம் தேதி புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் அவர்கள் இன்று மதுரை வந்தார்கள்.

அவர்களை மதுரையில் ராயல் என்ஃபீல்ட் கிளப் நிர்வாகிகளும், பொதுமக்களும் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் மதுரை ரிங்ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்த அவர்கள், இன்று மாலையில் மீண்டும் தங்கள் பயணத்தை குமரியை நோக்கித் தொடங்குகிறார்கள். நாளை அவர்கள் கன்னியாகுமரியைச் சென்றடைவார்கள் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in