இந்தியாவின் ’சூப்பர் பெண்கள்’ இவர்கள்தான்... கேரள தாதிகளை கொண்டாடும் இஸ்ரேல்!

மீரா - சபிதா மற்றும் பாதுகாப்பு அறையின் குண்டுகள் தாக்கிய கதவு
மீரா - சபிதா மற்றும் பாதுகாப்பு அறையின் குண்டுகள் தாக்கிய கதவு

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, வயதான தம்பதியைக் காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த இரு பெண்களை, இந்தியாவின் 'சூப்பர் வுமன்' இவர்கள்தான் என்று இஸ்ரேல் கொண்டாடுகிறது.

கேரளாவை சேர்ந்த சபிதா மற்றும் மீரா மோகனன் ஆகியோர் இஸ்ரேலில் தாதிகளாக பணியாற்றி வருகின்றனர். கசா எல்லையில் அமைந்திருக்கும் இஸ்ரேலிய குடியிருப்பு ஒன்றில் வயதான தம்பதியரை பராமரிக்கும் பொறுப்பில் அன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். அக்.7 அதிகாலையில் திடீரென குண்டுகள் வெடிப்பு மற்றும் துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் அவர்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கியது.

சபிதா மற்றும் குண்டுகள் துளைத்த கதவு
சபிதா மற்றும் குண்டுகள் துளைத்த கதவு

பதற்றமடைந்த சபிதா, மீரா ஆகியோர் வயதான இஸ்ரேலிய தம்பதியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டின் பாதுகாப்பு அறைக்குள் பதுங்கினர். அதன் பிறகே முன்னெப்போதும் இல்லாத தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை அந்த கேரள சகோதரிகள் அறிந்தனர். பாதுகாப்பு அறைக்குள் இஸ்ரேலியர்கள் இருப்பதை மோப்பமிட்ட ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டும், மிரட்டல் விடுத்தும் கதவை திறக்க முயன்றனர்.

ஆனால் குண்டுதுளைக்காத பாதுகாப்பு அறை கதவின் கைப்பிடியை மீராவும் - சபிதாவும் இடைவிடாது பிடித்துக்கொண்டதால், கதவை திறக்க எத்தனித்தவர்களின் முயற்சி தோற்றது. இப்படி சுமார் நான்கரை மணி நேரம் பாதுகாப்பு அறையின் கதவருகே நின்றபடி 2 பெண்களும் போராடியதில், கடைசியில் மதியம் 1.30 மணியளவில் அங்கு விரைந்து வந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு மூலம் ஹமாஸ் போராளிகளை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இந்த திகில் அனுபவத்தை வீடியோவாக சபிதா வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததோடு, இவர்கள்தான் இந்தியாவின் சூப்பர் பெண்மணிகள் என்று பாராட்டவும் செய்துள்ளனர். சபிதாவின் வீடியோ மற்றும் இஸ்ரேலின் ட்விட்டர் பதிவு ஆகியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!

போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!

கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!

பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!

குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in