ஹிஜாப் எரிப்பு போராட்டம்: இந்தியாவின் முதல் சம்பவம்

ஹிஜாப் எரிப்பு போராட்டம்: இந்தியாவின் முதல் சம்பவம்

ஈரான் தேசத்தில் தொடங்கிய ஹிஜாப் எரிப்பு போராட்டம் பல்வேறு நாடுகளிலும் பற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முதல் ஹிஜாப் எரிப்பு போராட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்துள்ளது.

மாஷா அமினி என்ற ஈரானிய பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த அவலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் பெண்கள் தங்களது கூந்தலை கத்தரித்தும், ஹிஜாபை எரித்தும் போராடத் தொடங்கினர். பெண்கள் ஒற்றுமையுடன் தங்களை எதிர்ப்பை தெரிவித்த விதமும், அவர்களுக்கு சர்வதேசளவில் ஆதரவு கிடைத்ததும் ஈரான் அரசை தடுமாறச் செய்தது.

மாஷா அமினி மரணத்தை அடுத்து செப்டம்பர் மத்தியில் ஈரானில் தொடங்கிய ஹிஜாப் எரிப்பு போராட்டம் உலகம் முழுக்க பரவியது. பல்வேறு நாடுகளிலும் ஹிஜாப் எரிப்பை ஓர் அடையாளமாக்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பெண்ணுரிமையாளர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்துக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கூடிய சுதந்திர சிந்தையானர்கள் கூட்டம் ஒன்றை முன்னிட்டு ஹிஜாப் எரிப்பு போராட்டமும் நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட பல்வேறு மதங்களை சார்ந்த பெண்களும் இருந்தனர். கேரள முற்போக்கு அமைப்புகளில் ஒன்றான யுக்திவாடி சங்கம் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in