திருஷ்டி போக்க குழந்தைக்கு கண்ணாடி வளையல் போடணும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-25

திருஷ்டி போக்க குழந்தைக்கு கண்ணாடி வளையல் போடணும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-25

நம்பிக்கை:

”வேங்கைப்பால் பொட்டும், கருவளையல்களும் குழந்தையின் திருஷ்டியைப் போக்கும்.”

உண்மை:

கருவேல (Pterocarpus marsupium) மரப்பட்டைகளிலிருந்து பெறப்படும் பாலை (resin), தேங்காய் சிரட்டையில் சேர்த்து வைத்து, தேவைப்படும்போது தண்ணீர் சேர்த்து, குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டாகப் பயன்படுத்துவது காலம் காலமாக உள்ள நடைமுறை.

திருஷ்டிப் பொட்டுகள் வீட்டில் செய்ய வாய்ப்பில்லாத நகரங்களில் இவை இப்போது வர்த்தகமாகவே மாறி, அது இயற்கையான பொருட்களால் செய்தவையா அல்லது எதுவும் வேதிப் பொருட்களால் ஆனவையா என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.

வேதிப் பொருட்கள் இல்லாத இந்த இயற்கைப் பொட்டு, செயற்கைப் பொட்டுகளைக் காட்டிலும் நல்லதுதான் என்றாலும், இதிலும் அலர்ஜி ஏற்படக்கூடும் வாய்ப்புகள் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதைவிட திருஷ்டிக்கென பயன்படுத்தப்படும் கண்ணாடியால் செய்த கருவளையல்கள், குழந்தையின் கைகால் அசைவுகளில் உடைந்து தோலில் காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்பதால் அவை இன்னும் ஆபத்தானவை. பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றும் மிக மிக அழகானவைதான். கூடவே சமயத்தில் திருஷ்டிப் பொட்டே குழந்தையைப் பார்க்க இன்னும் அழகாக்கி விடுவது இதில் இருக்கும் இன்னொரு அழகான முரண்.

திருஷ்டிப் பொட்டுகளும், கருவளையல்களும் குழந்தையின் சரும மென்மையைப் பார்க்கும்போது தேவையில்லாதது என்றே தோன்றினாலும், குடும்பத்தாரின் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு இவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது என்பதே பெரும்பான்மை மருத்துவர்களின் கருத்து.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
திருஷ்டி போக்க குழந்தைக்கு கண்ணாடி வளையல் போடணும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-25
நீவித் தேய்த்துக் குளிக்க வைத்தால் குழந்தை நல்லா தூங்கும்!?: அவ(ள்) நம்பிக்கைகள்-24

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in