பெண்களுக்கான சூப்பர் திட்டம்... எல்ஐசியில் தினமும் 87 ரூபாய் முதலீடு... ரூ.11 லட்சம் கிடைக்கும்!

பெண்கள்
பெண்கள்

எல்ஐசியில் பெண்களின் பாதுகாப்புக்காக மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

எல்ஐசி யில்  ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பெண் குழந்தைகள் என ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இவற்றில் பெண்களுக்கான  அசத்தல் திட்டமாக  ஆதார் ஷிலா திட்டம் விளங்குகிறது.

பெண்களுக்காகவே செயல்படக்கூடிய தனிநபர் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் தான் இந்த ஆதார் ஷிலா திட்டம். ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே ஆதார் ஷிலா திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுடையவர்களாக உள்ளனர். முதலீட்டாளர்களுக்கு வயது 8 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாலிசி காலத்தைத் தேர்வு செய்து அதிகப்பட்சமாக 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். அதிகப்பட்ச முதிர்வு வயது 70 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் இணையக்கூடிய பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக ஒருவேளை இறக்க நேரிடும்போது அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இது மற்ற பாலிசிகளை விட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு வெறும் 87 ரூபாய் தினசரி முதலீடு செய்வதன் மூலம் கணிசமான தொகையைச் சேமிக்க உதவியாக உள்ளது.

உதாரணமாக 55 வயதான நபர், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 87 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால் முதல் ஆண்டு முடிவில் அவர்களின் மொத்த பங்களிப்பு ரூ.31 ஆயிரத்து 755 ஆக இருக்கும். மேலும் பாலிசிதாரர்கள் 70 வயதை அடையும்போது, மொத்தம் ரூ.11 லட்சத்தைப் பெற தகுதி பெறுகிறார்கள். இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்று நினைக்கும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் குறைந்தப்பட்சம் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை நெகிழ்வுத்தன்மையுடன் முதலீடு செய்யலாம்.

இவ்வாறு பெண்களுக்காகவே உள்ள இந்த எல்ஐசி சேமிப்புத் திட்டத்தில் இணையும் போது, பெண்களுக்கும் குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுபோன்ற திட்டங்களில்  முதலீடு செய்து பெண்கள் தங்கள்  எதிர்காலத்தை  பாதுகாப்பானதாக ஆக்கிக் கொள்ளலாம்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!

அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!

அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!

திருச்சியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in