இணைய உலகம்

மீண்டும் ‘தோனி’ ஆட்டம்!
இணைய உலகம்
தோனி - விராட் கோலி

‘கேப்டன் கூல்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் தோனியின் ஆட்டம், இந்த ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் மீண்டும் ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை அவர் மைதானத்துக்குள் ஆடப் போவதில்லை. மாறாக, டி-20 உலக கோப்பை இந்திய அணியை வழிநடத்தப் போகிறார். விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு ஆலோசகராகக் களம் காண்கிறார். அவரது வருகையை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வரவேற்றிருக்கிறது. பிசிசிஐ தோனி, விராட் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. ‘மாஸ்டர் ஸ்ட்ரோக் ’ என்று தினேஷ் கார்த்திக் கூற, வாசிம் ஜாஃபர் ‘சும்மா அதிருதில்ல’ என்ற சிவாஜி ரஜினி புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார். சமூக வலைதளங்கள் முழுக்கவும் ரசிகர்கள் இதை வரவேற்று இருப்பதோடு, தோனி வழிநடத்த, விராட் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி எப்படி ஆடப் போகிறது என்ற அலசலும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.