வலிமை இழக்கும் ‘வலிமை’

வலிமை இழக்கும் ‘வலிமை’

தொகுப்பு: ஜெ.சரவணன்

இவ்வளவு காலமாய், வலிமை அப்டேட் எங்கே என்று போனி கபூரை தூங்க விடாத குறையாக பாடாய் படுத்தினர் நெட்டிசன்கள். இந்நிலையில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால், அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பெரிதும் கிண்டல் செய்யப்பட்டது. தற்போது படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘வேற மாதிரி... வேற மாதிரி’ என்று பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, அதை ஏதோ மாதிரி இசையமைத்து பாடி ஒப்பேத்தேயிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அஜித் போன்ற நடிகரின் படத்தின் முதல் பாடல் இவ்வளவு மொக்கையாகவா இருக்கும் என்றும் சலித்து கொட்டுகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் அஜித் ரசிகர்கள், “சிம்டாங்காரன் பாட்டு மட்டும் என்ன ஒழுங்கா” என்று விஜய் ரசிகர்களை சீண்டினர். நா.முத்துக்குமார் இல்லாத யுவனின் இசை அம்மா இல்லாத அதிமுக மாதிரி தடுமாறிட்டு இருக்கு என்று சிலரும், விக்னேஷ்சிவன் ஏதோ நாலு வரியைப் போட்டு மொக்கையா வேணா நீ எழுதலாம்... அதுக்காக லிரிக்ஸ்ட் விவேக் அளவுக்கெல்லாம் எழுத முடியாதுப்பா. ஆஸ்கார் நாயகன் மியூசிக்கையே மொக்க பண்ற அளவுக்கு வித்தைக்காரன்ப்பா அவன் என்று ஒருபக்கமும் கிண்டலடிக்கிறார்கள். ‘அப்டேட் எங்கனு திட்ராய்ங்க, அப்டேட் விட்டாலும் திட்ராய்ங்க’ என்று கலங்கிப் போயிருக்கிறாராம் போனி.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in