ரஜினியின் ‘தர்பார்’ மாஸ்!

ரஜினியின் ‘தர்பார்’ மாஸ்!

தொகுப்பு: தேவா

பிரச்சினைகள் வெடிக்கும் போது இவர் படம் வருகிறதா அல்லது இவர் படம் வரும் நேரம் பார்த்து பிரச்சினைகள் வெடிக்கிறதா என்று குழம்பும் அளவுக்குத்தான் ரஜினியின் சமீபகால படங்கள் வெளியாகின்றன. அதனால், படத்தைப் பற்றி பேசுவதா பிரச்சினை பற்றி கருத்துச் சொல்வதா என்று அவரே தலையைப்  பிய்த்துக்கொள்கிறார். நாடே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்க, தர்பார் ட்ரெய்லர் வெளியானது. இரண்டே நாளில் தமிழில் ஒரு கோடி பேரும் இந்தியில் 1 கோடியே 30 லட்சம் பேரும் தெலுங்கில் 30 லட்சம் பேரும் ட்ரெய்லரைப் பார்த்திருக்கிறார்கள். படத்தில் மும்பை போலீஸாக நடித்திருக்கும் ரஜினி புது கெட்டப் புது ஸ்டைல் எனக் கலக்குகிறார். ஆனால், அரசியல் அவரை சும்மா இருக்க விடாமல் சுரண்டிக்கொண்டே இருக்கிறது. அவர் சாதாரண நேரத்தில் பேசினாலே வைரலாகும். பிரச்சினையின்போது அவர் என்ன சொன்னாலும் இன்னும் வைரலாகிறது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.