இணைய தலைமுறையின் பத்து வருட சவால்!

இணைய தலைமுறையின் பத்து வருட சவால்!

என்னதான் பொங்கல் பண்டிகை குதூகலத்தில் இருந்தாலும் கடந்த வாரத்திலும் இன்றைய தலைமுறை இணைய தலைமுறைதான் என்பதை நிரூபித்தார்கள். பொங்கல் ரிலீஸ் படங்கள், தமிழிசையின் மான் கொம்பு சண்டை என இணையத்தில் பேசுவதற்கும் பகிர்வதற்கும் செய்திகள் அதிகமிருந்தாலும், யாரோ ஒருவர் வழக்கம்போல ஃபேஸ்புக்கில் பத்து வருட சவாலை  கொளுத்திப் போட்டுவிட்டார். சவால் என்றால்தான் பிஞ்சு முதல் பிரதமர் வரை கிளம்பிவிடுவோமே. எல்லோரும் பத்து வருட சவாலை ஏற்று, 2019-ல்

எடுத்த புகைப்படத்தையும், 2009-ல் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து, #10yearschallenge என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர். இதில் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் வழக்கம்போல நம்மூர் ஃபிடல் மற்றும் சேகுவேரா, தமிழிசை, மதுரவாயல் மேம்பாலத் திட்டம் இவற்றையெல்லாம் இந்த 10 வருட சவாலில் இழுத்துவிட்டு அநியாயத்துக்கு அலப்பறை செய்தனர். இதற்கிடையில், சினிமா நடிகர்களின் பத்து வருட வித்தியாச புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகின. இந்தியாவில் மட்டுமல்ல... உலகம் முழுவதுமே #10yearschallenge தான் கடந்த வார இணையதள மூச்சாக இருந்தது. 

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.