கிணற்றில் அசால்டாக டைவ் அடிக்கும் மூதாட்டி

காடு வா...வா...ங்குது வீடு போ...போ...ங்குது என கிராமப்புறங்களில் வயதானவர்கள் பேசுவதை கேட்கலாம். வயதாகி விட்டதால் என்ன செய்ய முடியும் என்பதை குறிக்க இதுபோல் பேசுவர். ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் தங்கசாலையைச் மூதாட்டி பாப்பம்மாள் (75) இதை பொய்யாக்கியுள்ளார்.

இந்த வயதிலும் இளைஞர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல அடி உயரத்தில் இருந்து கிணற்றில் சர்வ சாதாரணமாக குதித்து நீச்சலடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இதுகுறித்து பாப்பம்மாள் கூறியதாவது: சிறு வயது முதலே கிணற்றில் குதித்து நீச்சல் அடிப்பதில் ஆர்வம் இருந்தது. இதனால் சிறுமியாக இருந்த போது, நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குளித்து மகிழுவோம். 5 வயது சிறுமியாக இருந்தபோது தந்தையிடம் நீச்சல் கற்றுக் கொண்டேன்.

தற்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நீச்சல் அடிக்க கற்று கொடுத்து வருகிறேன். முன்பு போல் அதிகமாக கற்றுத்தர முடியவில்லை. எனினும், என்னால் முடிந்தவரை இளைஞர்களுக்கும், பெரியோர்களுக்கும் நீச்சல் கற்று தந்து வருகின்றேன். என்னுடைய மகள்,மகன் பேரன்,பேத்தி,கொள்ளுப் பேரன் என அனைவருக்கும் கற்றுக் கொடுத்துள்ளேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in