
நீலகிரி மாவட்டத்தில் இரவு வேலைகளில் சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கரடிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளின் அருகிலும், தேயிலை தோட்டங்களுக்கு அருகிலும் சுற்றி திரிகின்றன.
கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே எம்.கைகாட்டி பகுதியில் சாலையில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுத்தை சாலையைக் கடந்து செல்லும் வரை காத்திருந்தனர். அந்த சிறுத்தை சாலையைக் கடந்த பின் அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. அடிக்கடி இது போன்று சாலைகளின் அருகிலேயே சிறுத்தைகள் நடமாடி வருவதால், குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுத்தைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பாக வனத்துறையினர் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது சிறுத்தை சாலையில் நடமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது