இட்லி ரூ.2; டீ ரூ.6 - ஒருவேளை உணவுக்கு ரூ.20 போதும்!

ஏழைகளின் பசி தீர்க்கும் ஹோட்டல்

சீர்காழி அருகே, திருமுல்லைவாசல் சாலையில் உள்ள வேட்டங்குடி பிரிவில் இருக்கும் பஷீர் கடை அப்பகுதி ஏழை எளிய மக்களின் அன்றாடப் பசியைப் போக்குகிறது. 2 ரூபாய்க்கு ஒரு இட்லி கிடைப்பதால், 10 ரூபாய் இருந்தால் போதும் 5 இட்லியில் வயிறு நிறைந்து விடுகிறது. 2 வகை சட்னியுடன் கேட்க கேட்க சாம்பார் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கூலி வேலைக்குப் போகும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் சிறு வணிகம் செய்பவர்கள் என அத்தனை பேரும் இந்தக் கடையால் குறைந்த செலவில் பசியாறிச் செல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in