தண்ணீரால் மூச்சுமுட்டும் யானைக்கல் தரைப்பாலம்!

வைகையில் வரிசைகட்டும் வெள்ளம்
வைகை
வைகை

நதியில் தண்ணீர் ஓடாதபோதே வைகையைக் கொண்டாடும் மதுரைக்காரர்களுக்கு, தண்ணீர் நிறைந்து செல்லும் ஆற்றின் அழகை ரசிக்கச் சொல்ல வேண்டியதில்லை.

சித்திரையில் அழகரைக் காணமட்டும் வைகையில் தண்ணீர் வந்த காலம் மாறி, சில ஆண்டுகளாக அழகர் வராவிட்டாலும், அவரைத் தேடி அடிக்கடி கரைதொட்டு தண்ணீர் ஓடுவது வாடிக்கையாகி விட்டது.

முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து அப்படியே வைகை ஆற்றில் வெளியேற்றப்படுதால், ஆற்றில் விநாடிக்கு 4 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் பாய்கிறது.

இது தவிர, சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும், ஆங்காங்கே உள்ள கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரிநீரும் வைகையில் சேர்கின்றது. இதனால், நீண்ட காலத்துக்குப் பிறகு வைகையில் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கும் மேலாக யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால், ஏவி மேம்பாலத்தில் ஏகத்துக்கும் போக்குவரத்து நெரிசல். அதையெல்லாம் பொருட்படுத்தாது ஆற்றைக் கடக்கும் மதுரைவாசிகள் நின்று வைகையை ரசிப்பதும், செல்போனில் போட்டோ எடுப்பதும் தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in