அதிர்ச்சி வீடியோ... நாயை வேட்டையாட வீட்டிற்குள் வந்த கருஞ்சிறுத்தை!

வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தை
வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தை

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த கருஞ்சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக அரவேணூவில் இருந்து பெரியார்நகர் செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே கரடிகள் மற்றும் சிறுத்தைகள், தனியாகவும், கூட்டமாகவும் அடிக்கடி சுற்றித்திரிந்து வருகின்றன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தை
வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தை

இந்நிலையில் பெரியார் நகர் பகுதியில் இரவு நேரங்களில் கருஞ்சிறுத்தை ஒன்று தனியாக சுற்றித்திரிந்து வருகிறது. அங்குள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றது. வளர்ப்பு நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால், நல்வாய்ப்பாக உயிர் தப்பியது. நாயை வேட்டையாட முடியாத கருஞ்சிறுத்தை ஏமாற்றத்துடன் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதுவரை வீடுகளின் அருகே சுற்றி வந்த சிறுத்தைகள், தற்போது வேட்டையாடும் நோக்கில் வீடுகளுக்குள்ளேயே புகுந்து வருவதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, வனத்துறையினர் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவற்றை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in