வேலைக்கு சென்ற கணவன் திடீர் மாயம்... ஆட்டோ விளம்பரம் செய்து தேடும் மனைவி!

மாயமான கணவனை மீட்க ஆட்டோ மூலம் விளம்பரம் செய்தும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் தேடும் மனைவி பழனியம்மாள்.
மாயமான கணவனை மீட்க ஆட்டோ மூலம் விளம்பரம் செய்தும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் தேடும் மனைவி பழனியம்மாள்.

மனைவி ஊருக்கு போனாலே கொண்டாடும் கணவன்களுக்கு மத்தியில் மாயமான கணவனை கண்டு பிடிக்க ஆட்டோ பிரச்சாரம் செய்து மனைவி தேடி வருவது காண்போரை கண் கலங்கச் செய்கிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை எழுதி தரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறைந்த வருமானத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சிவராமன் வாழ்க்கை நடத்தி வந்தார்.

கடந்த 7-ம் தேதி காலை வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து பணிக்கு சென்ற சிவராமன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பழனியம்மாள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கணவன் மாயமானது தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் சிவராமனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆனால் சிவராமன் கிடைத்தபாடில்லை. இதனால் காணாமல் போன தனது கணவனை மீட்டுக் கொண்டுவர ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்திய பழனியம்மாள் அதில் ஒலிபெருக்கி மூலம் தன்னுடைய கணவர் குறித்த தகவல்களை பதிவு செய்து ஒலிபரப்பியபடி தேடி வருகிறார். செல்லும் இடங்களில் கணவரின் போட்டோவுடன் கூடிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி, தெரிந்தால் தகவல் அளிக்கும்படி கூறி வருகிறார்.

இரு வாரங்களுக்கு மேலாக கணவரை தேடி வரும் பழனியம்மாளின் செயல் காண்போரை கண்கலங்கச் செய்கிறது. அதேவேளையில் கணவர் கிடைத்துவிடுவார் என பழனியம்மாளுக்கு மக்களும் ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in