வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரை

வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரை

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை பொன்மலை , பொன்மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் 'தவறாமல் வாக்களிப்போம்' என்ற விழிப்புணர்வு பரப்புரை பொன்மலையடிவாரம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் இன்று நடந்தது.

வாக்களிப்போம் சமூகக் கடமையாற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. 'எனது வாக்கு, எனது உரிமை' 'என் வாக்கு விற்பனைக்கு இல்லை' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்: பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் . என வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள், மிதிவண்டி, இரண்டு சக்கரம் வாகனம் மற்றும் கார் ஆகியவற்றில் ஒட்டியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் எஸ்.ஈஸ்வரன், லோகேஷ் , என்.தயானந்த், ஏசுதாஸ், வெங்கேடஷ், இளங்கோ, நரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in