அடேயப்பா... நிலவில் லேண்டர் உருவாக்கிய மெகா பள்ளம்... தூக்கி வீசப்பட்ட 2.06 டன் துகள்கள்!

நிலவில் ஏற்பட்ட பள்ளம்
நிலவில் ஏற்பட்ட பள்ளம்
Updated on
2 min read

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ள விவரம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. பூமியிலிருந்து  விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி அதை பத்திரமாக நிலவில் தரையிறங்க வைத்து, அங்கு ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில்  நிலவிற்கு சென்ற சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டது. அதற்காக அதில் பிரத்யேக எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை லேண்டர் சரியாக தரையிறங்கும் பகுதிக்குச் செல்லும்போது, அதிகமான உந்து சக்தியை ஏற்படுத்தி நிலவில் கீழே விழும் லேண்டரின் வேகத்தை குறைக்க  உதவும்.

லேண்டர் தரை இறங்கிய இடம்
லேண்டர் தரை இறங்கிய இடம்

அதன் இன்ஜினில் இருந்து வரும் திரஸ்டர் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அதன் சக்தியால் நிலவின் மேல் பரப்பில் உள்ள மணல் மற்றும் கல் ஆகியவை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இடத்திலிருந்து பறந்து கொஞ்சம் தொலைவில் சென்று விழும் என்பதால்  அங்கு பள்ளம் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டது. 

இப்படியாக பள்ளம் ஏற்பட்டால் அதற்கு 'ரிஜெக்ட்டா ஹாலோ' என பெயர். இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், விக்ரம் லேண்டரில் தரையிறங்கிய பின்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது.

இதில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பின்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியைச் சுற்றி ஒரு வெளிச்சமான பேட்ச் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட மணல் மற்றும் கற்களால் உருவானதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இது சுமார் 108.4 சதுர மீட்டர் அளவிலான பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் லேண்டர்
விக்ரம் லேண்டர்

இந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது தூக்கி வீசப்பட்ட மணல் மற்றும் கற்களின் எடையைப் பார்த்தால் சுமார் 2.06 டன் அளவிலான எடை கொண்ட நிலவின் பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வுகள் மூலம் இஸ்ரோவிற்கு நிலவின் மார்ஃபாலஜி, ஜியாலஜி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இன்னும் நல்ல புரிதல்கள் ஏற்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டம் மூலம் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக செய்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்ப பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in