உள் மாவட்டங்களில் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்!

வானிலை ஆய்வு மையம் தகவல்
உள் மாவட்டங்களில் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்தத் தொடங்கியிருக்கிறது. மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இப்போதே வெப்பம் 98 டிகிரியைத் தாண்டிவிட்டது. இதனால் ஞாயிறு விடுமுறையில், கையில் காசிருப்போர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற கோடைவாசஸ்தலங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காசில்லாதவர்கள், இயற்கையையும், விதியையும் நினைத்து நொந்துகொண்டிருக்கிறார்கள். இதில் அறிவிக்கப்படாத மின்தடை வேறு.

இந்தச் சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கும் என்றும், வருகிற மார்ச் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.