
வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலக இணைப்பதிவாளரிடம், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலகத்தில் அதிகாரிகள் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்ததை அடுத்து, போலீஸார் விசாரணையில் இறங்கினர். புகார்களின் அடிப்படையில், இன்று மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாளிடம், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில் அவர் தனித்தனியாக பைகளில் மறைத்து வைத்திருந்த 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகத் தெரிகிறது.