2 ஆண்டுகளாக கொத்தடிமை வாழ்க்கை... செங்கல் சூளையில் குடும்பத்தை அதிரடியாக மீட்ட ஆர்டிஓ!

மீட்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள்
மீட்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த குடும்பத்தினரை கோட்டாட்சியர் அதிரடியாக  சென்று மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளை ஒன்று செய்யப்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகச் சிலர் பணியாற்றி வருவதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுதது  பைரப்பள்ளிக்கு விரைந்து சென்ற அரசு அதிகாரிகள், அங்கு நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா மற்றும் இவர்களது குழந்தைகள் கார்த்திகேயன், தருண் ஆகிய 4 பேரும் கடந்த 2 ஆண்டுகளாகச் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

மீட்கப்பட்ட குடும்பத்தினர்
மீட்கப்பட்ட குடும்பத்தினர்

இதனையடுத்து நான்கு பேரையும் மீட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், அவர்களை ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு துவங்கி அந்த வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.  அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.

செங்கல் சூளையில் 2 வருடங்களாகக் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in