10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா!

மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல்
மும்பை விமான நிலையத்தில்...
மும்பை விமான நிலையத்தில்...

மகாராஷ்ராவில் கரோனா பரவல் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கிறது. அங்கு நேற்று ஒரேநாளில் 5,368 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு மட்டும் 450 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருப்பதால், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று பெர்னே கிராமத்தில் உள்ள ராணுவ நினைவுச் சின்னத்தைப் பார்வையிட வந்த அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், "மும்பையில் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துவருகிறது. இதுவரையில் பத்துக்கும் அதிகமான அமைச்சர்கள், இருபதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஊரடங்கைத் தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வெளியேவந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் காட்டுகின்றன" என்று சொன்னார்.

மும்பை நகரில் கரோனா தொற்று அதிகரித்திருப்பதால், மிக நெருக்கடியான சூழலில் வாழும் தாராவித் தமிழர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in