வேகமாகப் பரவும் நோரோ வைரஸ்: மிரட்டும் அடுத்த தொற்று!

வேகமாகப் பரவும் நோரோ வைரஸ்: மிரட்டும் அடுத்த தொற்று!

கரோனா, டெங்கு, ஜிகா வைரஸ்களின் வரிசையில் நோரோ வைரஸ் பரவல் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று(நவ.13) காலை நிலவரப்படி, கேரளாவில் 13 பேர் நோரோ வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், ஒரேநேரத்தில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு நோரோ வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, இந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குளிர்காலத்தை ஒட்டி பரவும் விபரீத வைரஸ் பரவல்களில் நோரோ வைரஸும் ஒன்று. முன்னதாக ஜூலையில் இங்கிலாந்திலும், 2 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் சில இடங்களில் நோரோ வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் வாந்தி பேதிக்கு ஆளாகி, உயிருக்கும் அச்சுறுத்தல் வரை செல்லும். உடனடியாக தொற்றுக்கு ஆளானவருக்கு சிகிச்சைகள் அளிப்பதுடன், மற்றவர்களுக்கு தொற்று பரவாது கவனிப்பதும் அவசியம்.

நோயாளியுடனான நேரடி பரவல் மூலமே நோரோ வைரஸ் வேகமாக தொற்றுகிறது. நோரோ வைரஸ் உறுதிசெய்யப்பட்ட பகுதியில் உண்ணும் உணவு, அருந்தும் நீர் ஆகியவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்லப் பிராணிகள் வளர்ப்போர் கூடுதல் கவனமாக இருப்பதும் அவசியம்.

பரவல் வேகம் இயல்பாகவே அதிகம் என்பதாலும், தற்போது குளிர்காலம் என்பதாலும் நோரோ வைரஸ் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டியதாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in