மாடலிங் கலைஞரான கூலித் தொழிலாளி: நெட்டிசன்கள் கொண்டாடும் ‘மம்மிக்கா’

மாடலிங் கலைஞரான கூலித் தொழிலாளி: நெட்டிசன்கள் கொண்டாடும் ‘மம்மிக்கா’
‘மம்மிக்கா’

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகில் உள்ள கொடுவல்லி பகுதியைச் சேர்ந்தவர் மம்மிக்கா(60). கூலித் தொழிலாளியான இவரது, மாடலிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

மாடலிங்காக ‘மம்மிக்கா’
மாடலிங்காக ‘மம்மிக்கா’

‘பாறைக்கடவில் மம்மி’ என்பதுதான் மம்மிக்காவின் இயற்பெயர். மம்மி அண்ணன் என்று இவரை அக்கம்பக்கத்தார் அழைக்க, மலையாளத்தில் ‘மம்மிக்கா’ என்பதே இவருக்குப் பெயராகிப்போனது. இவரை வைத்து எடுக்கப்பட்ட மாடலிங் புகைப்படங்கள் இப்போது பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளன.

இந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்படக் கலைஞர் ‘ஷெரிக் வயலில்’ இதுகுறித்து கூறும்போது, ‘‘மம்மிக்கா என் பக்கத்து வீட்டுக்காரர். நல்ல நண்பரும்கூட. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கிடைத்த கூலி வேலைக்குச் சென்று தன் வாழ்க்கையை ஓட்டிவந்தார். புகைப்படக் கலைஞனான நான் சொந்தமாக ஸ்டுடியோ வைத்துள்ளேன். எனது தொழிலை விளம்பரப்படுத்தும் வகையில் என் கடை பிண்ணனியில் நிறுத்தி, மம்மிக்காவை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்.

மாடலிங்காக ‘மம்மிக்கா’
மாடலிங்காக ‘மம்மிக்கா’
மாடலிங்காக ‘மம்மிக்கா’
மாடலிங்காக ‘மம்மிக்கா’

மம்மிக்காவின் உடலமைப்பு மலையாள நடிகர் விநாயகனைப் போல் இருக்கும். அது எனக்குள் ஆழமாகப் பதிந்ததால்தான் இந்த முயற்சியை செய்தேன். வழக்கமான அவரது கைலி, தலைக்குமேல் கட்டிய துண்டு, அவிழ்த்துவிடப்பட்ட சட்டை பட்டன் என்னும் உருவத்துக்கு மாற்றாக கோட், சூட், டை, ஷூ, கையில் ஐபேடு என அவரது உடையை மெருகூட்டினேன். ஆள்பாதி ஆடை பாதி என்பதுபோல் அடுத்ததாக அவரது முடி, தாடியையும் சலூனுக்கு அழைத்துப்போய் மாற்றினேன்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் உள்ளூர்வாசிகள் நான்குபேர் இதைப்பற்றிப் பேசுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் இன்று இணையம் ஏற்படுத்தியிருக்கும் உலகம் ரொம்பப் பெரியது. ஒரேநாளில் மம்மிக்கா சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவிட்டார். இந்தப்படம் இவ்வளவு பெரிதாகப் பேசப்படும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’’ என்றார்.

வைரல், டிரெண்டிங் பற்றியெல்லாம் அறிந்திராத மம்மிக்கா, “தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் மாடலிங்கும் செய்வேன். வாய்ப்பு இல்லாத நாள்களில் எனக்குத் தெரிந்த கூலிவேலைக்குச் செல்வேன்’’ என்கிறார்.

Related Stories

No stories found.