மஞ்சப்பை சுமந்த மன்னார்குடி எம்எல்ஏ!

டி.ஆர்.பி. ராஜா
டி.ஆர்.பி. ராஜா

மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, மஞ்சள் பையுடன் சட்டப்பேரவைக்குச் சென்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டியுள்ளார்.

நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், மஞ்சப்பை எடுத்துச் செல்வது கேவலம் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து எல்லா இடத்துக்கும் மஞ்சள் பையோடு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார். முதல்வரின் இந்த முன்னெடுப்பை ஒரு சிலர் ஆர்வமாகப் பின்பற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா நேற்று சட்டப்பேரவைக்கு வந்தபோது, தனது லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை ஒரு மஞ்சள் பையில் போட்டு, வழக்கமாக மற்ற பைகளை மாட்டிக் கொள்வதுபோல முதுகில் மாட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்த மற்ற எம்எல்ஏக்கள் ஆச்சரியத்துடன் அவரிடம் இதுகுறித்து விசாரித்தனர். ஒருசிலர் பாராட்டவும் செய்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ராஜாவின் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

ராஜாவைப் பின்பற்றி மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களும் மஞ்சப்பை சுமந்து, முதல்வரின் சீரிய திட்டத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லலாமே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in