சிபிஎஸ்இ-க்கு எதிராகச் சீறும் ஜோதிமணி

சிபிஎஸ்இ-க்கு எதிராகச் சீறும் ஜோதிமணி
ஜோதிமணி

சிபிஎஸ்இ வழி பயிலும் மாணவர்களுக்கான வினாத்தாள் ஒன்றில், பாலின பேதத்தை ஊக்குவிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று(டிச.11), சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. வினாத்தாளில் இடம்பெற்ற சில வாசகங்கள் தொடர்பாக மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் விவாதித்துள்ளனர். இந்த வகையில் விவகாரம் பொதுவெளிக்கு வந்தது.

அந்த சிபிஎஸ்இ வினாத்தாள்
அந்த சிபிஎஸ்இ வினாத்தாள்

ஓரிரு பத்திகள் வழங்கப்பட்டு அவை தொடர்பான வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளிக்குமாறு அமைந்த பகுதியில், ஏராளமான பிற்போக்கான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. பெண்ணடிமைத் தனம், பாலின பேதம், குழந்தைகள் உரிமை எதிர்ப்பு என மலினமான போக்கில் அவை வழங்கப்பட்டிருந்தன. படிக்கும் மாணவர் மனதில் பிற்போக்குத்தனத்தை தூவுவதாகவும் அவை அமைந்திருந்தன.

சிபிஎஸ்இ சேர்மனுக்கு ஜோதிமணியின் கடிதம்
சிபிஎஸ்இ சேர்மனுக்கு ஜோதிமணியின் கடிதம்

இவை தொடர்பாக, இன்று(டிச.12) சிபிஎஸ்இ வாரியத்தின் தலைவருக்கு காரமான கடிதம் ஒன்றை ஜோதிமணி அனுப்பியுள்ளார். அதில், 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் வாசகங்களில் ஆட்சேபனைக்கு உரியவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி, தனது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த கருத்துகள் நமது அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதாகவும் விளக்கியதுடன், சிபிஎஸ்இ கல்வி முறை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதையே இவை பிரதிபலிக்கின்றன என்றும் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in