இந்து கோயில்களின் நிதியிலிருந்து மீன் மார்க்கெட் கட்டுவதா? - எச்.ராஜா கண்டனம்

இந்து கோயில்களின் நிதியிலிருந்து மீன் மார்க்கெட் கட்டுவதா? - எச்.ராஜா கண்டனம்
எச்.ராஜா

‘தமிழக இந்து கோயில்களின் நிதியை சட்டவிரோதமாக எடுத்து மீன்மார்க்கெட் கட்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்று பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியிருக்கிறார்.

சென்னை, குயப்பேட்டையில் உள்ள கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில்களின் அருகே, புதுத் தெரு, கதவெண் 2-ல் உள்ள பழைய சந்தை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய மீன் சந்தைக்கான கட்டிடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளுக்கு 1.55 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயில்களில் இருந்து கடனாகப் பெற்றுக்கொள்வது என்றும் இந்து அறநிலையத் துறை கண்காணிப்பாளர் குமரகுருபரன் நேற்று(டிச.27) நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த விவரம் வெளிவந்துள்ள நிலையில், எச்.ராஜா, “இந்து கோயில்களின் நிதியை சட்டவிரோதமாக எடுத்து மீன்மார்க்கெட் கட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறையின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக எச்.ராஜா பேசிவருகிறார் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மீன் மார்க்கெட் கட்டும் நடவடிக்கை குறித்த அவரது கருத்து முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.