வாக்கிங் வராமல் டேக்கா... நண்பர்கள் செய்த தரமான காரியம்!

வாத்தியத்துடன் சென்று நண்பரை எழுப்பிய நண்பர்கள்
வாத்தியத்துடன் சென்று நண்பரை எழுப்பிய நண்பர்கள்

காலை நடைபயிற்சிக்கு வராமல் தூங்கி டேக்கா கொடுத்தவரின் வீட்டிற்கு, பேண்டு, டிரம்பெட் வாத்தியங்களுடன் சென்று நண்பர்கள் அவரை எழுப்பிய சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.

தினமும் காலையில் நண்பர்களுடன் நடைபயிற்சிக்கு வரும்  ரவி அவ்வப்போது நடைப்பயிற்சிக்கு வராமல் டேக்கா கொடுத்து விட்டு தூங்கி இருக்கிறார். அவரை வித்தியாசமான முறையில் கலாய்க்க நினைத்த அவருடைய  நண்பர்கள் தூங்கிக் கொண்டிருந்த ரவியின் வீட்டிற்கு, பேண்டு, டிரம்பெட் வாத்தியங்களுடன் இசை முழங்கச் சென்றிருக்கிறார்கள். வீட்டு வாசலில் திடீரென வாத்திய சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்த ரவி வீட்டு வாசலுக்கு ஓடி வந்திருக்கிறார். வாசலில் அவரது நடைப்பயிற்சி நண்பர்கள் வாத்தியக் கச்சேரி வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நண்பர்கள் குறும்பு
நண்பர்கள் குறும்பு

நண்பர்கள் செய்த இந்த தரமான சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பின்னூட்டம் போட்டு வரும் நெட்டிசன்கள் பலரும் இவர்களது நட்பை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்க ரவி கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பலர் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டியும் உள்ளனர். ’இது மாதிரி ஒரு நட்பு வட்டம் இருந்தால் போதும் வேறு எதுவுமே தேவைப்படாது நம் வாழ்க்கையில்... என்று நெகிழ்வாகவும் நெட்டிசன்கள் நெகிழ்ந்து வருகிறார்கள். 

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in