தாய் சடலத்துடன் 4 நாட்கள் தூங்கி பள்ளி சென்றுவந்த சிறுவன்

தாய் சடலத்துடன் 4 நாட்கள் தூங்கி பள்ளி சென்றுவந்த சிறுவன்

ஆந்திர மாநிலம் திருப்பதி வித்யாநகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. தனியார் கல்லூரி பேராசிரியரான இவர் கணவரைப் பிரிந்து தனது 10 வயது மகன் ஷாம் கிஷோருடன் தனியாக வசித்துவந்தார். ஷாம் அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தான்.

கடந்த 8-ம் தேதியன்று ராஜலட்சுமி வீட்டில் கால் தவறி விழுந்ததில் பின்னந்தலையில் அடிபட்டு, இறந்துவிட்டார். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனான கிஷோர் தாய் தூங்குவதாக நினைத்து, தானும் அருகில் படுத்து தூங்கியிருக்கிறான். மறுநாள் வயிறு பசித்தபோது, அம்மா ஏற்கெனவே சொல்லிக்கொடுத்திருந்தபடி சாதம் வடித்து, அவனும் சாப்பிட்டு, தாய்க்கும் ஊட்ட முயன்றிருக்கிறான்.

இப்படியே தொடர்ந்து 4 நாட்கள் தாயுடன் தூங்கி பள்ளிக்குச் சென்றுவந்திருக்கிறான் அச்சிறுவன். அவனது உடை அழுக்காக இருப்பதையும், அவன் மீது துர்நாற்றம் வீசுவதையும் பார்த்து விசாரித்த பள்ளி நிர்வாகம், அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அவனது தாய் இறந்து, உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவர்கள் ராஜலட்சுமியின் சகோதரர் துர்கா பிரசாத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின் பேரில் ஆந்திர போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.