ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகிறது ஆசிய சிறுத்தைகள்!


ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகிறது ஆசிய சிறுத்தைகள்!

70 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிறுத்தைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது சிறுத்தைகள் மீண்டும் தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் கட்டமாக 5 முதல் 6 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று சுற்றுசூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆறு தேசியப் பூங்காக்களுக்கு 35 முதல் 40 சிறுத்தைகள் கொண்டுவரப்படும்.

இது தொடர்பாக பேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து வழிமுறைகளும் முடிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுடனான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எங்கள் குழு ஒன்று தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ளது'' என தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து நிபுணர்கள் குழு ஜூன் 15-ம் தேதி இந்தியா வந்து, சிறுத்தைகள் இடமாற்றத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குச் செல்கிறது.

மகாராஜா ராமானுஜ் பிரதாப் சிங் தியோ 1947-ல் இந்தியாவில் கடைசியாக மூன்று ஆசிய சிறுத்தைகளை வேட்டையாடி சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது, இதன்பின்னர் இந்த வகை சிறுத்தைகள் இந்திய நிலப்பரப்பில் இருந்து காணாமல் போனது. 1952-ல் இந்திய அரசாங்கம் ஆசிய சிறுத்தைகள் நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in