‘மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்… மதுக்கடை வாசலை மிதிக்க வேண்டாம்’: மணமேடையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மணமக்கள்!

மணமக்களின் மது ஒழிப்பு பிரச்சாரம்
மணமக்களின் மது ஒழிப்பு பிரச்சாரம்

தமிழகம் மதுவிலிருந்து விடுபட வேண்டி, புதுமணத் தம்பதியாய் மணமேடையில் நின்றவர்கள் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் திருமுறை தொண்டாற்றும் ஓதுவார்,மாதவன் என்பவரின் மகள் பிரியங்காவுக்கும், வினோத்துக்கும் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து நேற்று மாலை கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

இதில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு, திருமுறை நூல்கள் மற்றும் திருநீற்றுப் பிரசாதங்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

அத்துடன் விமோசனம் இயக்கம் மூலம் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை மணமக்களிடம் வழங்கினார்.

"மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம், மதுபானக்கடை வாசல் மிதிக்க வேண்டாம்" மதுவில் இருந்து விடுபடுவோம்! மாண்புடன் வாழ்வோம்! என்னும் வாசகங்களை தாங்கிய வண்ணம் புதுமணத் தம்பதியர் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மணமக்களின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் அதனை உறுதி மொழியாய் ஏற்றுக் கொண்டனர். இது திருமண வரவேற்புக்கு வந்தவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in