உடலுக்குள் ஒரு ராணுவம் - 1: தடுப்பூசியின் தாத்பரியம்!

நோய்த் தடுப்பாற்றல் குறித்து அலசும் மருத்துவத் தொடர்
உடலுக்குள் ஒரு ராணுவம் - 1: தடுப்பூசியின் தாத்பரியம்!

ஆக்ஸ்போர்டு அகராதி, ஆண்டு முழுதும் உலக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து, அதை அந்த ஆண்டின் சிறந்த சொல்லாக அறிவிக்கிறது. அதன்படி, 2021-ல் அது தேர்ந்தெடுத்துள்ள சொல், ‘தடுப்பூசி’.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், உலகெங்கிலும் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஆனதைப் பார்த்தும் கேட்டும் கதிகலங்கிப்போன பொதுச் சமூகம் ‘இதனிடமிருந்து விடுதலை கிடைக்காதா?’ என ஏங்கத் தொடங்கியபோது, வராது வந்த மாமணிபோல் வந்தது கரோனா தடுப்பூசி! கரோனாவை ஒழிக்க வந்த பேராயுதமாக இந்தத் தடுப்பூசி கணிக்கப்பட்டது. அதனால், தடுப்பூசி எனும் அருஞ்சொல் அனைவரின் வாய்ச்சொல்லிலும் இடம்பிடித்துவிட்டது.

பொதுவாக, ஒரு நோய்க்கிருமிக்கு எதிராகத் தடுப்பூசி தயாராவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், கரோனாவுக்கு ஓராண்டிலேயே 4 வகைப்பட்ட தடுப்பூசிகள் தயாராகிவிட்டன. அதற்குத் தற்போதைய தொழில்நுட்ப உத்திகள் கைகொடுத்தன. நவீன மருத்துவத்துக்கே உரிய அயராத உழைப்பின் அடையாளங்கள் இவை.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in