அதள பாதாளத்தில் நிலத்தடி நீர்மட்டம்... என்னவாகும் இந்தியாவின் எதிர்காலம்?

நிலத்தடி நீர்
நிலத்தடி நீர்

இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் இந்தியா மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஐநாவின் சுற்றுச்சூழல், மனித பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் பெரும் பகுதி மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். சுமார் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான உயிரினங்களுக்காக நிலத்தடி நீர் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகம் நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, சீனா இணைந்து பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை விட இந்தியா பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவு அதிகமாக இருக்கிறது.

பூமியிலிருந்து நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதால் விரைவான அழிவு என்பது ஏற்பட வாய்ப்பாக இருக்கும். உலகில் உள்ள 31 முக்கிய நீர்நிலைகளில் 27 நீர்நிலைகளில் மிக வேகமாக நீர் குறைந்து வருகின்றன. ஒருபுறம் கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது. 

கடல் நீர் உயர்வதால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை, அதே நேரம் நிலத்தடி நீர் குறைவதால் பேரழிவு ஏற்பட வாய்ப்பாக இருக்கும். விவசாயம்  மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படும். உலகில் 70 சதவீதம் விவசாயத்திற்கு நிலத்தடி நீரே பிரதானமாக இருக்கிறது.

நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உயிரினங்களுக்கான உணவு உற்பத்தி பெரும் தடையாக மாறும். இதனால் உணவுகளின் விலை ஏறுவதுடன் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உணவு கிடைப்பதில் சிரமம் அதிகரிக்கும்.

குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 78% கிணறுகள் அதிக அளவில் தண்ணீரை சுரண்டிவிட்டன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அங்கு பிரதான பிரச்சினையாக தற்போது உருவெடுத்து இருக்கிறது. இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் 2025 ம் ஆண்டு நிலத்தடி நீர் மிக குறைந்த அளவை சென்றடையும். உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும்.

இந்தியா மட்டுமல்லாது வடகிழக்கு சீனா, மேற்கு அமெரிக்க, மெக்சிகோ, ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரும் அளவில் குறைந்து இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது இந்நிறுவனம் விரைவான அழிவு, நிலத்தடி நீர் குறைவு, மலை பனிப்பாறை உருகுதல், விண்வெளி குப்பை, வெப்பம் அதிகரித்தல், பாதுகாப்பு இல்லாத எதிர்காலம் ஆகிய தலைப்புகளிலும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in