தீபாவளி பரிசாக 15 ஊழியர்களுக்கு புல்லட்: நீலகிரி தேயிலைத் தோட்ட உரிமையாளர் தாராளம்!

தனது ஊழியர்களுடன் புல்லட்டில் சிவகுமார்
தனது ஊழியர்களுடன் புல்லட்டில் சிவகுமார்

நீலகிரி மாவட்டத்தில் தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ராயல் என்ஃபீல்டு புல்லட் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அதன் உரிமையாளர் சிவக்குமார்.

ஊழியர்களுடன் சிவகுமார்
ஊழியர்களுடன் சிவகுமார்

எந்த ஒரு நிறுவனத்திலும் பணியாற்றும் பணியாளர்கள் தீபாவளியை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பார்கள். காரணம்  தீபாவளிக்கு வழங்கப்படும் போனஸ் தொகை தான். அதை வைத்து  ஜவுளி,  பட்டாசு என்று தீபாவளியை செலவுகளை ஈடுகட்டி விடலாம் என்பதுதான் எதிர்பார்ப்புக்கு காரணம்.  போனஸ் பணத்தோடு  சேர்த்து  ஒரு இனிப்பு பாக்ஸ் வழங்கப்படுவதும்  தற்கால வழக்கம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  டீ எஸ்டேட் வைத்திருக்கும் சிவகுமார் என்பவர் தனது ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கியதோடு இனிப்பு  பொட்டலம் வழங்காமல் வேறு ஒரு மிகப்பெரிய பரிசைக் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

புதிய புல்லட்களுடன்  ஊழியர்கள்
புதிய புல்லட்களுடன் ஊழியர்கள்

தனது நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரியும் 15 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பரிசாக வழங்கியிருக்கிறார். 15 புல்லட்களையும் நேற்று ஒரே நேரத்தில் எடுத்து வந்து தனது நிறுவனத்தில் வைத்து அந்த ஊழியர்களை வரவழைத்து ஒவ்வொருவரின் கையிலும் புல்லட்டின் சாவியை கொடுத்து  அவர்களை திக்கு முக்காட செய்திருக்கிறார். அத்துடன் அந்த 15 பேருடன் தானும் ஒரு புல்லட்டில்  ஊர்வலமாக சென்று இந்த மகிழ்ச்சியை கொண்டாடியிருக்கிறார்.

இந்த இன்ப அதிர்ச்சியால் நெகிழ்ந்து போன தொழிலாளர்கள், தங்கள்  உரிமையாளர் சிவகுமாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in