ஒரு நாடு இரு அணிகள்: மாற்றம் காண்கிறதா இந்திய கிரிக்கெட்?

ஒரு நாடு இரு அணிகள்: மாற்றம் காண்கிறதா இந்திய கிரிக்கெட்?

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் ஓர் இந்திய அணி, ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கையில் ஓர் இந்திய அணி. அதுவும் ஒரே சமயத்தில் இரு இந்திய அணிகளும் களமாடச் சென்றிருக்கின்றன. கேட்கவே, சற்று ஆச்சரிய மாக இருக்கிறது அல்லவா!

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. கிரிக்கெட்டில், ஒரே நாடு ஒரே சமயத்தில் இன்னொரு அணியை உருவாக்குவது என்பது புதிய விஷயம் அல்ல. கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் என்ற காலம் மட்டுமே இருந்தபோதே, 1949-ல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இன்னொரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 1959-ல் நியூசிலாந்துக்கு ஆஸ்திரேலிய இரண்டாம் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரலாறும்கூட உண்டு. 1971-ல் ஒரு நாள் போட்டி அறிமுகமான பிறகு, அதுபோன்ற முயற்சி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

ஆஸ்திரேலியா Vs ஆஸ்திரேலியா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in