வைரம் என் பக்கத்திலேயே இருந்திருக்கிறது!- முதல்வரால் பாராட்டப்பட்ட புகைப்படக் கலைஞர் நெகிழ்ச்சி

வைரம் என் பக்கத்திலேயே இருந்திருக்கிறது!- முதல்வரால் பாராட்டப்பட்ட புகைப்படக் கலைஞர் நெகிழ்ச்சி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல முடியாத விஷயத்தை ஒற்றைப் புகைப்படம் உணர்த்திவிடும் என்பார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் கரோனா கால நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்ட வேலம்மாள் பாட்டியின் நிம்மதிப் புன்னகையைப் பதிவுசெய்த ஒரு புகைப்படம் பெரும் புகழ்பெற்றிருக்கிறது. புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி எடுத்த அந்தப் படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘இந்தச் சிரிப்பே நமது ஆட்சியின் சிறப்பு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியதுடன், ஜாக்சனை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார்.

துணிச்சலான புகைப்படக் கலைஞர்

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராகப் பணிபுரியும் ஜாக்சன் ஹெர்பி, பிடிஐ நிறுவனத்துக்கும் புகைப்படங்கள் எடுப்பவர். எவ்வளவு சிரமமான சூழலிலும் துணிந்து புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவர். குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் புரட்டிப்போட்டபோது இவர் எடுத்த புகைப்படங்கள் வெகுவாகப் பேசப்பட்டன. பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவந்த பிரதமர் மோடிக்கு, அரசு சார்பில் அளிக்கப்பட்ட படங்களில் சரிபாதி இவர் எடுத்தவையே! அதேபோல், கரோனா அச்சம் உச்சத்தில் இருந்தபோதே கரோனா வார்டுக்குள் சென்று புகைப்படம் எடுத்தது, கரோனாவுக்குப் பலியானவரின் உடல் தகனம் செய்யப்படுவதை இந்தியாவிலேயே முதன்முறையாகப் புகைப்படம் எடுத்தது என பல கடினமான தருணங்களைத் தனது கேமராவில் பதிவுசெய்தவர் ஜாக்சன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in