பெண்ணுக்கு ஆயுசு கெட்டி!- ஆய்வு சொல்லும் புதிய பார்வை

பெண்ணுக்கு ஆயுசு கெட்டி!- ஆய்வு சொல்லும் புதிய பார்வை

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கரோனா தொற்றுக்குள்ளானாலும் ஆக்ஸிஜன் குழாய் வழியாக சுவாசித்தபடி அடுப்பங்கரையில் நின்று சமைத்துக் கொண்டிருக்கும் ஓர் இந்தியப் பெண். தாய்மையை போற்றும் வாசகத்தைத் தாங்கி இப்படியொரு பெண்ணின் புகைப்படம், அன்னையர் தினத்தன்று சமூக ஊடகங்களில் உலா வந்ததைப் பலரும் கண்டிருக்கக்கூடும்.

இந்தியாவில் சராசரியாகக் கரோனா தொற்றால் 9 ஆண்கள் உயிரிழக்கும்போது, 10 பெண்கள் இறப்பதாக அறியப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தியப் பெண்களின் உடல் ஆரோக்கியம் பொருட்படுத்தப்படுவதில்லை என்றே சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’ சுட்டிக்காட்டுகிறது. உடல் உபாதைகள் ஏற்படும்போது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கரோனா வைரஸ் என்னவோ பாலின பேதமின்றி எல்லோர் மீதும்தான் தொற்றிக்கொள்கிறது. ஆனால், இந்தியா, நேபாளம், வியட்நாம், சுலோவேனியா ஆகிய நாடுகளிலோ ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெண்களின் இறப்பு விகிதம் கூடுதலாக இருப்பது அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதால்தான். ஆனால், பெரும்பாலான உலக நாடுகளில் கரோனாவுக்கு ஆண்களே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நேர்ந்த கரோனா மரணங்களில் 63 சதவீதத்தினர் ஆண்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. சீனாவில் நேர்ந்த கரோனா பலிகளில் 70 சதவீதம் ஆண்கள் என்கின்றனர் சீன ஆராய்ச்சியாளர்கள். ரோம் உயர் மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலும் 5 பெண்களுக்கு 8 ஆண்கள் என்கிற விகிதாச் சாரத்தில் கரோனா மரணங்கள் ஏற்படுவதாக சொல்லப்பட்டது. நியூயார்க் நகரத்தில், இதுவரை தொற்றுக்கு ஆளான 1 லட்சம் ஆண்களில் 43 பேர் மரணித்திருப்பதாகவும், 1 லட்சம் பெண்களில் 23 பேர் மரணித்திருப்பதாகவும் பதிவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in