உதிரச் சேவையை ஊக்குவித்தவருக்கு ‘டெட்டால்’ தந்த அங்கீகாரம்!

உதிரச் சேவையை ஊக்குவித்தவருக்கு ‘டெட்டால்’ தந்த அங்கீகாரம்!

என்.பாரதி
readers@kamadenu.in

புகழ்பெற்ற கிருமிநாசினி தயாரிப்பான ‘டெட்டால்’, கரோனாவுக்கு எதிராகக் களமாடும் தன்னார்வலர்களை வித்தியாசமான முறையில் கவுரவித்து வருகிறது.

‘ரெக்கிட்’ எனும் பிரிட்டன் நிறுவனத்தின் தயாரிப்பான டெட்டால் இந்தியாவில் நீண்ட கால பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தனது தயாரிப்பான சானிட்டைசர் பாட்டில்களில் தனது லட்சினையான போர்வாளைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் கரோனா முன்களப்பணியாளர்களின் புகைப்படத்தையும், அவர்களது பெயரையும் சேர்த்து சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது ‘டெட்டால்’!
இதற்காக, இந்திய அளவில் சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்கள் தேர்வுசெய்யப்பட்டு, 40 லட்சம் டெட்டால் சானிட்டைசர் பாட்டில்களில் அவர்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், குமரி மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் நாஞ்சில் ராகுலும் இடம்பெற்றிருக்கிறார். கரோனா காலத்திலும் இடைவிடாது ரத்ததானப் பணிகளைச் சிறப்பாகச் செய்தமைக்காக இவர் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார். ‘டெட்டால்’ அங்கீகாரம் தந்த உற்சாகத்தில் இருந்த நாஞ்சில் ராகுலிடம் பேசினோம்.

“பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜரா இருக்கேன். சின்ன வயதில் இருந்தே சமூக சேவையில் ஆர்வம் அதிகம். ‘நாஞ்சில்  ரத்ததான அறக்கட்டளை’ எனும் ரத்தக்கொடையாளர் அமைப்பின் நிறுவனராகவும் இருக்கேன். எங்க அறக்கட்டளையில் 7 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஏழை மாணவ - மாணவிகளுக்குக் கல்வி உதவியும் செய்கிறோம். கரோனா நேரத்தில் வீட்டுத்தனிமையில் இருக்கிறவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே போய் சாப்பாடு கொடுப்பது, மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொடுப்பது என உறுதுணையாக இருக்கோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in