மீண்டும் மலாலா!- சுதந்திரக் கருத்தும் எதிர்வினையும்

மீண்டும் மலாலா!- சுதந்திரக் கருத்தும் எதிர்வினையும்

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஒரு பள்ளி மாணவியாக இருந்த மலாலா, அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான தாலிபான்கள் பெண்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளைத் துணிச்சலாக எழுதிவந்தார். புனைப்பெயரில் எழுதிவந்த மலாலா மீது கடும் அதிருப்தியில் இருந்த தாலிபான்கள், 2012-ல் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது பலத்த காயங்களுடன் அவர் உயிர்பிழைத்தார். மலாலா மீதான இந்தத் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. சிகிச்சைக்காக பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு, நல்லவேளையாக உயிர்பிழைத்தார் மலாலா. அதன் பின்னர் அவருக்கு உலக அளவில் அங்கீகாரங்களும் குவிந்தன. ஒரு சாதாரண மாணவியாக இருந்த மலாலா, இந்தப் பத்தாண்டுகளில் உலக ஆளுமைகளில் ஒருவராக மாறிவிட்டார். இப்போது மீண்டும் தனது துணிச்சலான பேச்சால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

‘நான் மலாலா!’

குண்டு துளைத்தபோது பாகிஸ்தானில் இருந்த மலாலா, கண்விழித்தபோது பிரிட்டனின் பர்மிங்ஹாமில் உள்ள குயின் எலிஸபெத் மருத்துவமனையில் இருந்தார். திடீரென்று எல்லாமே மாறிவிட்டது. நாடு விட்டு நாடு அல்ல, கண்டம் விட்டு கண்டம் மாறியிருந்தார் மலாலா. இனி பாகிஸ்தானில் வசிப்பது பாதுகாப்பற்றது என்பதால் அவரது குடும்பம் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்துவிட்டது. உடல்நிலை தேறி வீட்டுக்கு வந்தவரை, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சந்தித்துக் கொண்டேயிருந்தனர். தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுக்கொண்டிருந்தார் மலாலா. பல்வேறு நிறுவனங்கள் அவருக்கு விருதுகளை அளித்து, தங்களுக்குப் புகழ் சேர்த்துக்கொண்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in