பெருந்தொற்றுப் பாடங்கள்: ஒடிசாவின் வழியில் நாம் செல்வது எப்போது?

பெருந்தொற்றுப் பாடங்கள்: ஒடிசாவின் வழியில் நாம் செல்வது எப்போது?

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

சுனாமியில் தொடங்கி 2015 பெருவெள்ளம், ஒக்கி புயல், வார்தா புயல், கஜா புயல், டவ் தே புயல், கரோனா வரை கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் பலவிதமான இயற்கை சீற்றங்களையும் பெருந்தொற்றையும் தமிழ்நாட்டினர் எதிர்கொண்டு வந்திருக்கிறோம். ஆழிப்பேரலையால் பல்லாயிரம் உயிர்களைத் பறிகொடுத்து பரிதவித்தபோது இனி இதுபோன்று நேரக் கூடாது என்றே நினைத்தோம். இயற்கைச் சீற்றத்தைக் காட்டிலும் கொடுங்காலமாக, இன்றைக்குக் கரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதேபோல இயற்கைச் சீற்றங்களும், பேரிடர்களும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. இவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் பேரிடர், பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடங்களைச் சேர்க்க ஒடிசா அரசு முடிவெடுத்துள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சரவையில் பேசிய முதல்வர் நவீன் பட்நாயக், “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்தப் பாடங்களைக் கற்பிப்பர். அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பேரிடர் மற்றும் பெருந்தொற்று மேலாண்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். அரசுப் பணிக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்திலும் இவை இணைக்கப்படும்” என்றார்.

நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள மாணவப் பருவத்திலிருந்து பயிற்றுவிக்க வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையை ஒடிசா அரசு கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இத்தகைய சிறப்பான கல்வித் திட்டத்தைத் தமிழகப் பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவது குறித்து கல்வியாளர்களுடன் உரையாடினோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in