தூங்கவிடாத கனவாக இருக்க வேண்டும்!- 23 வயதில் விமானி ஆன ஜெனி

தூங்கவிடாத கனவாக இருக்க வேண்டும்!- 23 வயதில் விமானி ஆன ஜெனி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

என்னதான் விஞ்ஞானம் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியிருந்தாலும் விமானப் பயணம் இன்றும் கூட பலருக்கும் கனவாகவே தொடர்கிறது. அதிலும் விமானியாகும் கனவோடு காத்திருக்கும் யுவ, யுவதிகள் ஏராளம்.

ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலமான கேரளத்தில் இதுவரை வணிகரீதியான விமானத்தை ஓட்டும் பெண் விமானிகள் யாருமில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில், கேரளத்தின் முதல் பெண் விமானி எனும் பெருமையை எட்டிப்பிடித்திருக்கிறார் ஜெனி ஜெரோம். இணை விமானியாக, ஷார்ஜாவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ‘ஏர் இந்தியா ஜி9 449’ எனும் விமானத்தைக் கம்பீரமாக ஓட்டித் தரையிறக்கிய ஜெனிக்கு 23 வயதுதான் ஆகிறது!

ஜெனியின் சாதனையைப் பாராட்டி, முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவைத் தொடர்ந்து மொத்த கேரளமும் ஜெனியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டது. வாழ்த்துகள் தந்த உற்சாகத்தில் வானில் மிதக்கும் பரவசத்தில் இருந்த ஜெனி ஜெரோமிடம் ‘காமதேனு’வுக்காகப் பேசினோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in