பெருந்தொற்று அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி?- இயற்கையின் மகத்துவத்தை உணர்த்தும் நிபுணர்கள்

பெருந்தொற்று அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி?- இயற்கையின் மகத்துவத்தை உணர்த்தும் நிபுணர்கள்

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

லட்சக்கணக்கானோரைப் பலிகொண்ட பிறகும் கரோனா வைரஸ், புதிய உருவெடுத்து மனித இனத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருக்கிறது. சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர்களையும் ‘கறுப்புப் பூஞ்சை’ (மியூகோர் மைகோசிஸ்) போன்ற தொற்றுகள் தாக்குவதாகச் செய்திகள் வருகின்றன. மறுபுறம் கரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் கடந்தும் நோய்க்கூறிலிருந்து விடுபட முடியாமல் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை,  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது நம்மைத் தாக்கும் நோய்களை எதிர்கொள்வது மட்டுமே இதற்கான தீர்வாகாது என்கிற எண்ணம் இதனால் வலுபெற்றுள்ளது. கரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய மனித நுரையீரலும் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியும் காற்று மாசுபாடு சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் வலுவிழந்து வருவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து மருத்துவருடனும் சுற்றுச்சூழல் ஆர்வலருடனும் உரையாடினோம்.

புகையோடு உலாவும் கரோனா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in