பெண்கள் யாருக்கு, எதனால் வாக்களித்தார்கள்?

பெண்கள் யாருக்கு, எதனால் வாக்களித்தார்கள்?

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை ஆண்களைவிட, 5.7 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்திருக்கின்றனர். அந்த வகையில், தமிழத்தில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றத்தில் பெண்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகித்திருப்பது உறுதியாகிறது. இந்நிலையில் தமிழகப் பெண்களின் வாக்குகளைத் தீர்மானித்த காரணிகள் குறித்து சிலரிடம் பேசினோம்.

“எம்ஜிஆர், ஜெயலலிதா என்னும் இரு பெரும் ஆளுமைகளும் இல்லை எனும் சூழலில் அதிமுக பெண்களின் ஆதர்சமான கட்சி என்கிற பிம்பமும் சரிந்து விழத் தொடங்கிவிட்டது” என்று பேசத் தொடங்கினார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி.

“பல பெண்கள், ‘அம்மாவே போயிட்டாங்க இனி என்னங்க அதிமுக?’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சர்ச்சையும் கட்சிக்குள் நிகழ்ந்த பிளவுகளும் அதிமுக கட்சி மீதான நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது. கரோனா காலத்தில் ஏழை மக்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோதும் மக்களைக் கைவிட்ட பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தது அக்கட்சியை மேலும் விலக்கிவைக்கச் செய்தது. கரோனா பேரிடர் நிவாரணத் தொகையாக அதிமுக அரசு கொடுத்த 1,000 ரூபாய் மக்களுக்குப் போதவில்லை. தேர்தல் நேரத்திலும் மத்திய அரசு சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 1,000 ரூபாய் வரை எகிறச் செய்தது பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டுபண்ணியது. இதெல்லாம் தான் பெண்கள் வாக்கு எதிர்பார்த்த அளவுக்கு அரசுக்கு ஆதரவாக திரும்பாததற்கு காரணமாக இருக்க வேண்டும்” என்றார் சுகந்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in