கரோனா வார்டில் டும்...டும்...டும்!- மலையாள தேசத்தில் ஒரு மறக்க முடியாத திருமணம்

கரோனா வார்டில் டும்...டும்...டும்!- மலையாள தேசத்தில் ஒரு மறக்க முடியாத திருமணம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கரோனாவை மையமாக வைத்து இன்றைக்கு எதிர்மறைச் செய்திகளே எங்கும் வியாபித்திருக்கின்றன. தொடரும் உயிர் இழப்புகள், பொதுமுடக்க அறிவிப்புகள் என கரோனா காலத்துக் கலக்கம், உடலைவிட மனதைத்தான் அதிகம் முடக்கிப்போடுகிறது. எவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்பதுபோல, இவ்வளவு நெருக்கடிகளுக்கும் மத்தியில், கேரளத்தில் கரோனா வார்டில் நடந்திருக்கும் திருமணம் பலரிடமும் ஆச்சரியப் புன்னகையை மலரச் செய்திருக்கிறது!

மணமகன் சரத்மோன் கரோனா தொற்றால் ஆழப்புழா அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். குறித்த முகூர்த்தத்தில் திருமணத்துக்காக மணமகள் அபிராமி, முழுக் கவச உடையோடு கோவிட் மையத்துக்கே வந்து சேர, அங்கேயே மிக எளிமையாகத் திருமணம் முடிந்தது. மணமகன் சரத்மோன் தொடர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் புகுந்த வீட்டுக்கு வாழச்சென்றிருக்கிறார் அபிராமி.

புதுமாப்பிள்ளை சரத்மோனிடம் பேசினேன். “திருமணத்துக்காகக் கத்தார் நாட்டிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வந்தேன். திருமணம் என்பதால் நெருங்கிய சொந்தத்தினர், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சுற்ற வேண்டியிருந்தது. நீண்ட நாள்கள் கழித்து ஊருக்கு வந்ததால் நண்பர்களும் அதிகம் பேர் வீட்டுக்கு வந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in