அன்பு ஒண்ணுதான் அனாதையா... ஆதரவற்ற ஜீவன்களுக்கு இறுதி மரியாதை செய்யும் கலைக்குழு!

அன்பு ஒண்ணுதான் அனாதையா... ஆதரவற்ற ஜீவன்களுக்கு இறுதி மரியாதை செய்யும் கலைக்குழு!

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கரோனாவின் கோரத் தாண்டவத்தால் பூங்காக்கள்கூட மயான பூமியாகிப்போன கொடுமையைக் கண்டு பதைபதைத்து நிற்கிறோம். கொள்ளை நோயால் கொத்துக்கொத்தாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மரக்கட்டைகள்போல் வண்டிகளில் ஏற்றப்படும் அவலத்தைக் காணச் சகிக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இத்தனை துயரங்களுக்கு எல்லோரையும் போல தானும் மவுன சாட்சியாக மட்டுமே வீற்றிருக்கவில்லை ‘திணைநில வாசிகள்’ நாடகக் குழு. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உயிர்நீத்த ஆதரவற்றவர்களின் சடலங்களை இக்குழுவினர் அடக்கம் செய்துவருகிறார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்தக் குழு. கரோனாவுக்கு அஞ்சி எல்லோரும் வீடடங்கி இருந்த நாட்களில்கூட, கைவிடப்பட்ட 100-க்கும் அதிகமான மனிதர்களின் சடலங்களுக்கு இவர்கள் இறுதி மரியாதை செய்திருக்கிறார்கள். 2015-ல் பெருமழையில் சென்னை தத்தளித்தபோதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியவர் இக்குழுவின் இயக்குநர் பகு. இவரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற 40 உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் வகிக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் முதல் ஐடி நிறுவன ஊழியர்கள்வரை இக்குழுவில் உண்டு. இவர்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பகுவுடன் இணைந்து பொதுச் சேவையிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.

வருமானத்தில் பாதி சமூகப் பணிக்கு நாடகக் கலைஞர் முருக பூபதியின் ‘மணல் மகுடி’ குழுவில் பட்டைத் தீட்டப்பட்டவர் பகு. மீனவர் பிரச்சினை, ஆணவக் கொலைகள், எழுத்தாளர்களின் கொலைகள் உள்ளிட்ட சமூக அரசியல் சார்ந்த கருத்தாக்
கங்களில் நாடகங்களை இயக்கிவருகிறார். கரோனா ஊழிக்காலத்தில் வேலையிழந்து வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்த புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை ‘போ’ எனும் ஆவணப் படமாக்கினார். இவரது இயக்கத்தில் திரைக் கலைஞர் நாசர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது ‘பாப்லோ நெருடா’ திரைப்படம். சமூக ஆர்வலர்களாலும் அரசியல் தலைவர்களாலும் திரைத்துறையினராலும் இப்படம் பரவலாகப் பாராட்டப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in