எத்தனை அலை வந்தாலும் இந்திய மருத்துவத்தால் சமாளிக்கலாம்!- நம்பிக்கையளிக்கும் சித்த மருத்துவர் எஸ். காமராஜ்

எத்தனை அலை வந்தாலும் இந்திய மருத்துவத்தால் சமாளிக்கலாம்!- நம்பிக்கையளிக்கும் சித்த மருத்துவர் எஸ். காமராஜ்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சுனாமியாகச் சுழன்றடித்துக்கொண்டிருக்கும் கரோனாவின் இரண்டாவது அலையில் பல மாநிலங்கள் பரிதவித்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், சுவாசிக்கப் பிராணவாயு கிடைக்காமலும் பலர் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான துயரநிலை நல்வாய்ப்பாக இன்னும் தமிழகத்தில் ஏற்படவில்லை. தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பதற்கு நமது மக்களிடம் இந்திய மரபுவழி மருந்துகளின் மேல் ஏற்பட்டிருக்கும் ஆர்வம்தான் காரணம் என்கிறது மருத்துவத் துறை.

கரோனாவின் முதல் அலை தமிழ்நாட்டுக்குள் நுழைந்தபோது மரபுவழி மருத்துவ முறை மீது அரசு நம்பிக்கை காட்டவில்லை. பரவலின் வேகம் ஆரம்பித்தபிறகுதான் நிலவேம்புக் கசாயமும், கபசுரக் குடிநீரும் ஆபத்பாந்தவனாகத் தெரியவந்தன. பெரும்
பாலான மாவட்டங்களில் கரோனாவுக்கான ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆங்கில மருத்துவ
மனைகளுக்கு நிகராக மக்கள் அங்கேயும் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள்.

ஆனால், தற்போது இரண்டாவது அலை தலைவிரித்து ஆடிவரும் நிலையில், இந்திய மருத்துவ முறைகளின் பக்கம் அரசு தன் கவனத்தைத் திருப்பவில்லை. முழுவதும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆங்கில மருத்துவத்தோடு இணைந்து கூட்டாகக் கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்கள் அரசின் ஆயுஷ் மருத்துவர்கள். அவர்களில் பலர் தங்கள் மருத்துவ முறைகளை மக்களுக்குச் சென்றுசேரும் விதத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். அவர்களில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜும் ஒருவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in