நீதியை நிலைநாட்டிய டார்னெல்லா!- விடியல் தந்த வீடியோ ஆதாரம்

நீதியை நிலைநாட்டிய டார்னெல்லா!- விடியல் தந்த வீடியோ ஆதாரம்

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

‘துணிச்சல் மிக்க இளம்பெண்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரமிப்புடன் கூறியிருக்கிறார். ஓபரா வின்ஃப்ரே, ‘கிரேட்ஃபுல்’ என்றும், நடிகை கெர்ரி வாஷிங்டன், ‘ஹீரோ’ என்றும் புகழ்ந்திருக்கிறார்கள். டார்னெல்லா ஃப்ரேஸியர் என்ற 17 வயது இளம் பெண்தான் இந்தப் பாராட்டுகளுக்குச் சொந்தக்காரர்.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கிடைக்க முக்கியக் காரணமாக இருந்ததற்காகத்தான் டார்னெல்லாவுக்கு இந்தப் பாராட்டு.

கடந்த ஆண்டு மே மாதம், கள்ளநோட்டு பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு. கைது செய்ததற்கு எந்த எதிர்ப்பையும் அவர் காட்டவில்லை. அப்படியும் அவரைக் கீழே தள்ளி, அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, டெரெக் சாவின் என்ற அமெரிக்கக் காவல் அதிகாரி கழுத்தை அழுத்திக் கொன்றார். அப்போது டார்னெல்லாவும் அவரின் 9 வயது கஸினும் ஸ்நாக்ஸ் வாங்குவதற்காகக் கடைக்கு வந்திருந்தார்கள். ஒருவர் கதறக் கதற கொலை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ந்த டார்னெல்லா, அந்தக் காட்சியைத் தன் மொபைல் மூலம் வீடியோவாக எடுத்தார். பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு ஜார்ஜ் ஃப்ளாய்டு நிரந்தர உறக்கத்துக்குச் சென்றுவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in