இசைவலம்: உள்ளத்தில் ஒளிரும் பேராம்!

இசைவலம்: உள்ளத்தில் ஒளிரும் பேராம்!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

இசைத்தமிழ் என்று நம் மொழியைப் பெருமிதத்துடன் சொல்கிறோம். தமிழில் பாட்டுக்கான இலக்கணம், கவிதைக்கான இலக்கணம் என்றெல்லாம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இசையில் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் அது எழுப்பும் ஒலியின் அளவும் வேறுபடும். அதைப் போலவே ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும்போது ஒலி அளவுகள் வேறுபடும். தமிழ் மொழியிலேயே இசை இருப்பதால்தான்  ‘இசைத் தமிழ்' எனும் பெருமை நம் தாய்மொழிக்கு இயல்பாக அமைந்திருக்கிறது எனலாம்!

பாடலை எழுதுவதற்கு, தமிழ் இலக்கணத்தில் வெண்பா, ஆசிரியப்பா உள்ளிட்ட பல வகைகள் இருந்தாலும் எளிமையாகவும் கேட்பவர்களையும் இனிமையாகப் பாடவைக்கும் ஒரு வடிவமாகவும் இருப்பது காவடிச் சிந்து. அண்ணாமலை ரெட்டியார் முருகனைப் புகழ்வதற்குப் பாடிய காவடிச் சிந்து மிகவும் பிரபலமானது. அண்மையில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய அம்பேத்கரின் புகழ்பாடும் பாடலை பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, காவடிச் சிந்து மெட்டில் பாடி வெளியிட்டிருக்கிறார். யூடியூபில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல், கேட்பவர்களின் சிந்தையைக் கவர்கிறது. இசை ரசிகர்கள் எனும் வட்டத்தைத் தாண்டி சமூகச் செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களின் பாராட்டையும் இது பெற்றிருக்கிறது.

தகிட… தகிட… என்னும் திஸ்ரம் தாளகதியில் காவடிச் சிந்து பாடல்கள் பொதுவாகப் பாடப்படும். பாடகர் விரும்பும்போது மிதமான கதி, துரிதகதி என்று பாடலின் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும் என்பது காவடிச் சிந்தின் தனிப்பட்ட சிறப்பு. பாடலின் உருவாக்கத்தில் அம்பேத்கரின் ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்!’ எனும் முழக்கங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறார் பெருமாள் முருகன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in