உச்சத்தில் பறக்கும் உர விலை!- அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாகும் விவசாயிகள்

உச்சத்தில் பறக்கும் உர விலை!- அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாகும் விவசாயிகள்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த அதிர்ச்சியை அளித்து வேறொரு போராட்டத்தைக் கையெடுக்கச் செய்திருக்கிறது மத்திய அரசு.

விவசாயத்துக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் டிஏபி உள்ளிட்ட உரங்களின் விலையை உயர்த்திக்கொள்ள உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து, வாக்குப்பதிவு முடிந்த கையோடு ஒரேயடியாக 60 சதவீதம் அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, டிஏபி எனப்படும் அடியுரத்தின் விலையை 1,200 ரூபாயிலிருந்து 1,900 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது அரசு நிறுவனமான இப்கோ. மற்ற உரங்களின் விலையையும் கணிசமாக உயர்த்தியிருக்கிறது. ஸ்பிக் நிறுவனம் தனது தயாரிப்பான டிஏபி உரத்தை 1,400 ரூபாயிலிருந்து 1,900 வரை உயர்த்திவிட்டது. பாக்டம்பாஸ் நிறுவனம் தனது தயாரிப்பான 20:20 கலப்புரம், பொட்டாஷ் உரம் ஆகியவற்றின் விலையைச் சுமார் 60 சதவீதம்வரை உயர்த்தியுள்ளது. இதனால் விவசாயிகளின் உற்பத்திச் செலவும் கடுமையாக அதிகரிக்கும்; இதற்காக மேலும் மேலும் அவர்கள் கடன் வாங்க நேரிடும்; பசுமைப் புரட்சிக்குப் பின்னர் உரத்தை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்துவரும் நிலையில், இந்த அதிகப்படியான விலை உயர்வு அவர்களைக் கடுமையாகப் பாதித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

பழிவாங்கும் நடவடிக்கை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in